இதையும் படிங்க

ஹட்டன் லயன்குடியிருப்பில் தீ ; 6 வீடுகள் சேதம்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அபோட்ஸ்லி தோட்டத்தின் மொண்டிபெயார் பிரிவிலுள்ள லயன் குடியிருப்பு ஒன்றில் இன்று (16) காலை தீபரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது 20 வீடுகளைக் கொண்ட குறித்த லயக்குடியிருப்பின் 6 வீடுகள் பகுதியளவில் எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

காலை 8 மணியளவில் ஏற்பட்ட தீயானது ஏனைய வீடுகளுக்கு பரவாமல் தோட்ட நிர்வாக அதிகாரிகளும் தோட்டத் தொழிலாளர்களும் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

தீ விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்