இதையும் படிங்க

சர்ச்சைக்குரிய சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது

சீனாவின் யுவான் வோங் – 5 கண்காணிப்பு கப்பல் இன்று (16) காலை இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. யுவான் வோங்-05 கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு ஆரம்பத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கமைய இந்த கப்பல் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு, ஆகஸ்ட் 17ஆம் திகதி வரை தரித்திருக்கும் என ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்து.

இந்நிலையில், இன்று 16 ஆம் திகதி முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

இதையடுத்தே சீனாவின் சர்ச்சைக்குரிய யுவான் வோங் – 5 கண்காணிப்புக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்