இணையத்தில் வைரலாகும் ஷாலினிக்கு அஜித் கொடுத்த இன்பப் பரிசு!

கடந்த 2000ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

இணையத்தில் வைரலாகும் ஷாலினிக்கு அஜித் கொடுத்த இன்பப் பரிசு!

தமிழ் சினிமாவுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, காதலுக்கு மரியாதை படம் மூலம் கதாநாயகியாக மாறியவர் நடிகை ஷாலினி. 

இவர் அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும்போது நடிகர் அஜித்குமாருடன் காதல் வயப்பட்டார். 

கடந்த 2000ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு நடிப்பிற்கு ஓய்வளித்துள்ள ஷாலினி, அண்மையில் தனது 43வது பிறந்தநாளைக் கொண்டாடினார். குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடும் அஜித்குமார், மனைவி ஷாலினிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், பிறந்தநாளை நட்சத்திர விடுதியில் வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். 

கேக் வெட்டும்போது மகள், மகனுடன் நடிகர் அஜித்குமார் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அமர்ந்திருக்கும் ஷாலினி அருகில் நின்றவாறு நடிகர் அஜித்குமார் இருக்கும் படம் பலரும் விரும்பும் படமாக மாறியுள்ளது.