இந்தியாவுக்கு தலைவலி கொடுக்க கூடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் யார் தெரியுமா?

இந்தியாவுக்கு சவாலை கொடுக்கக்கூடிய மூன்று வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் குறித்து பார்க்கலாம்.

ஜுலை 6, 2023 - 16:37
இந்தியாவுக்கு தலைவலி கொடுக்க கூடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் யார் தெரியுமா?

கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை டெஸ்ட் தொடரில் வீழ்த்தியது. இதன் காரணமாகத்தான் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு 10 நாட்கள் முன்பே சென்று பயிற்சி பெற்று வருகிறது. 

இந்த நிலையில் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கக்கூடிய மூன்று வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் குறித்து பார்க்கலாம்.

கிரைக் பிராத்வெயிட்

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரைக் பிராத்வெயிட் இதுவரை 85 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 28 அரைசதம் 12 சதம் அடித்திருக்கிறார். இதில் ஒரு இரட்டை சதமாகும். வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் போட்டியில் ஒரு அளவுக்கு வெற்றி பெறுவது என்றால் அது பிராத்வெயிட்டின் பேட்டிங்கால் தான். 

சுழற் பந்துவீச்சு வேகப்பந்து வீச்சு என அனைத்தையும் எதிர்கொண்டு நங்கூரம் போல் களத்தில் நின்று ரன் சேர்ப்பதில் வல்லவர். இவர் இந்தியாவுக்கு தலைவலியை கொடுக்கலாம்.

தேஜ்நரைன் சந்திரபால்

சந்தர்பாலின் மகன் தேஜ்நரைன் சந்திரபால் இவருடைய தந்தை எப்போதுமே இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியிருக்கிறார். 25 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக விளையாடி ஏழு சதங்கள் அடித்திருக்கிறார். 

இந்த நிலை சந்தர்ப்பாலும் தந்தையைப் போலே திறமை வாய்ந்தவராக திகழ்கிறார்.6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இதுவரை ஒரு சதம், ஒரு இரட்டை சதம் அடித்திருக்கிறார். டெஸ்டில் தற்போது சராசரி 45 மேல் வைத்திருக்கும் தேஜ்நரைன் சந்திர பால் இந்தியா போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக தன்னுடைய திறமையை நிரூபிக்க காத்திருக்கிறார். 

கீமர்ரோச் 

வேகப்பந்துவீச்சாளர் கீமர்ரோச் 78 டெஸ்டில் விளையாடிய இவர் இதுவரை இந்தியாவுக்கு எதிராக மூன்று போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். கடந்த முறை இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றபோது கீமர் ரோச் ஹட்ரிக் சாதனையை நூலிலையில் தவறவிட்டார். 

கீமர்ரோச் வேகம் நிச்சயமாக இந்தியாவுக்கு சிக்கலை கொடுக்கும். இந்த மூன்று வீரர்களையும் சமாளித்தாலே இந்திய அணிக்கு வெற்றி கிடைக்கும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!