நடிகை நயன்தாரா சொத்து மதிப்பு எவ்வளவு?

தென்னிந்தியாவிலேயே அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஹீரோயினாக நடிகை நயன்தாரா மட்டுமே திகழ்கிறார்.

நடிகை நயன்தாரா சொத்து மதிப்பு எவ்வளவு?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா. இவர் மலையாளத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான மனசினக்கரே என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஜெயராமிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதனையடுத்து தமிழில் ஐயா படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து இருந்தார்.

நயன் சம்பளம்

தென்னிந்தியாவிலேயே அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஹீரோயினாக நடிகை நயன்தாரா மட்டுமே திகழ்கிறார்.

நயன்தாரா சொத்து மதிப்பு

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூபாய். 165 கோடி என தகவல் வெளியாகி உள்ளது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

ஹைதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் 2 சொகுசு பங்களாக்கள், சென்னையில் 4 சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் நயன்தாராவுக்கு சொந்தமாக உள்ளது. அத்துடன் நயன்தாராவுக்கு தனியாக ஒரு பிரைவேட் ஜெட்டும் உள்ளது.

நயன்தாராவின் 165 கோடி சொத்துடன், விக்னேஷ் சிவன் சொத்தையும் சேர்த்தால் மொத்தம் 215 கோடி ரூபாய் சொத்து சேர்த்து வைத்து உள்ளனர்.