கொசுக்களை இயற்கை முறையில் விரட்ட எளிய வழிமுறைகள்

பொதுவாக கொசுக்களை, வீட்டில் உள்ள சில இயற்கைப் பொருள்களை வைத்து விரட்டலாம்.

Nov 19, 2022 - 08:44
கொசுக்களை இயற்கை முறையில் விரட்ட எளிய வழிமுறைகள்

கொசுக்களை இயற்கை முறையில் விரட்ட எளிய வழிமுறைகள்

பொதுவாக கொசுக்களை, வீட்டில் உள்ள சில இயற்கைப் பொருள்களை வைத்து விரட்டலாம்.

  • கடுகு எண்ணெயில் கொத்தமல்லியை அரைத்து ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து வீட்டைச் சுற்றி வைக்கவும்.
  • வீட்டில் சாமந்தி, லாவெண்டர், துளசி போன்ற செடிகளை வளர்க்கலாம். அதன் வாசனை கொசுக்களை விரட்டும்.
  • புதினா, கற்பூரவல்லி, காட்டுத் துளசி, கற்றாழை, செவ்வந்தி போன்ற செடிகள் கொசுக்களின் பரம விரோதி. இந்த எளிய செடிகளை வீட்டில் வளர்த்தால், கொசுக்கள் நெருங்காது.
  • வேப்ப இலைகளை எரித்து கொசுக்களை விரட்டலாம்.
  • புதினாவை லேசாக தண்ணீர் விட்டு அரைத்து, வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இதிலிருந்து வரும் வாசனையால் கொசுக்கள் பறந்துவிடும்.
  • வீட்டை சுற்றிலும் தூய்மையை கடைபிடிக்கவும், அடைப்புகள் இல்லாமலும், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும்.
  • வேப்ப எண்ணெயில் விளக்கு ஏற்றுவதினால், அவற்றில் இருந்து வரும் வாசனையினால் வீட்டுக்குள் இருக்கும் கொசு உடனே காணாமல் போய்விடும்.
  • காலை, மாலை வேளைகளில் கற்பூரத்துடன் சிறிது சாம்பிராணியைச் சேர்த்து புகையாகப் போட்டால் கொசுக்கள் எட்டிப்பார்க்காது.
  • உலர வைத்த வேப்பிலை, நொச்சி, யூகலிப்டஸ் இலைகளும் புகை போட ஏற்றது.
  • எலுமிச்சைப் பழத்தைப் பாதியாக நறுக்கி, அதில் கிராம்பை நட்டு வைத்தால், அதிலிருந்து வரும் வாசனை கொசுக்களை நெருங்க விடாது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.